தேசிய நூலகத்திற்கு சின்ஹல தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டம் சார்பாக தேசிய நூலகத்திற்கு அல்- குர்ஆன் சின்ஹல  மொழி தர்ஜுமா அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள இஸ்லாம் (சின்ஹல மொழியில்) புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன .

அதேபோன்று அன்பளிப்புக்கான நன்றிக்கடிதமும் வழங்கப்பட்டது .

அக்கடிதத்தில்

தேசிய நூல் நிலையமானது ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினரின் அறிவை வளர்க்கக்கூடிய கேந்திர மையமாக காணப்படும் தேசிய நூலகத்திற்கு உங்கள் உதவிகளை தந்துவியமைக்கு நன்றிகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.