முஸ்லிம்களுக்கெதிரான மனோ நிலையை வளர்ப்பதில் ஊடகங்களுக்கே பெரும்பங்கு – ஆய்வு முடிவு

உலகில் அதிகம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படும் அல்லது விமர்சிக்கப்படும் மதம் இஸ்லாம் என்பது பரவலாக நாம் எல்லோரும் அறிந்ததே . எனினும் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவில் மீடியாக்களுக்கே அதில் அதிக பங்கிருப்பதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது .
விஜயகாந்த், விஸ்வரூபம் கமல் தொடங்கி இன்று “மனு சதா” இராஜ்  வரை முஸ்லிம்களுக்கெதிரான மனோ நிலையை வளர்க்ககூடிய வேலைகளை செய்கின்றனர் . முஸ்லிம்கள் கெட்டவர்கள்  , தீவிரவாதிகள் ,கடும் போக்காளர்கள் என தொடர்ச்சியாக ஊடகங்களின் ஊடாக பரப்பி வருவதும் நாம் அறிந்ததே.
அமெரிக்காவில் அண்மையில் IOWA State University நடத்திய  ஆய்வில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்களுக்கே அதிக பங்களிப்பு இருப்பதாவும் ,  முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளுக்கும் முஸ்லிம்கள் ஒடுக்கபடுவதட்கும் பாரிய தொடர்புகள்  இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறின .
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கூட முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமாக கருத்து வெளியிடும் வேட்பாளரே நல்ல வரவேற்பை பெறுகிறார் எனக் கூறுகிறார் IOWA பல்கலைகழகத்தின் பேராசிரியர் அண்டர்சன் .
மேலும் இந்த ஆய்வை நடத்தும் போது ஆய்வில் பங்கெடுத்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான , நடுநிலையான மற்றும் முஸ்லிம்களுக்கு சார்பான வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன .அதே போன்று முஸ்லிம்களுக்கு எதிரான இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது .
அதில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகளை பார்த்தவர்கள் முஸ்லிம் நாடுகளில் நடக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவளிப்பதாக தெரிவித்தனர் . மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் அடக்குமுறைகளும் நியாயம் என்கிற ரீதியில் பதிலளித்தனர் .
முஸ்லிம்களுக்கு சார்பான காணொளிகளை பார்த்தவர்கள் முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் அரசியல் அடக்குமுறைகளுக்கு குறைந்த அளவிலேயே தமது விருப்பத்தை தெரிவித்திருந்தனர் .
பேராசிரியர்  அன்டேர்சன் இது பற்றி கூறும் போது ஊடகங்களின் தாக்கத்தை பங்குபற்றியவர்களின் கருத்துக்கள் மிக அருமையாக பிரதிபலிப்பதாக தெரிவித்தார் .அவர் மேலும் கூறும் போது ஊடகங்கள் சமூகத்தில் அதன் தாக்கத்தையும் தங்களின் பொறுப்பையும்  உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் .

Prof.Anderson
பத்திரிக்கை துறை பேராசிரியர் ரலுகா கொஸ்மா அவர்கள் பேராசிரியர் அன்டேர்சன் அவர்களின் இந்த ஆய்வு முடிவை பார்த்துவிட்டு ஊடகங்கள் சில விடயங்களை பூதாகரப்படுதுவதையும் ஒரு சிலரின் தவறுகளுக்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் விமர்சிப்பதில் நடுநிலை போக்கை கையாள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

Prof. Luca Cozma
மேலும் ஆய்வுக் குழுவானது முஸ்லிம்கள் மற்ற மக்களுக்கு தங்கள் மதம் சார்ந்த நம்பிக்கை, சமூகத்தில் தங்களின் ஆக்க பூர்வமான பங்களிப்புகள் மற்றும் இஸ்லாமிய  அறிவூட்டக்கூடிய  செய்லதிறன்மிக்க நிகழ்ச்சிகள் நடத்துவதால் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தவறான புரிதல்களை அகற்றலாம் என தெரிவித்துள்ளது .